சூர்யாவை இயக்குவீர்களா என ரசிகர் கேட்டதற்கு பார்த்திபன் தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.
Parthiban Tweet About Suriya Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படம் உலகம் முழுவதும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சூர்யா ரசிகர் ஒருவர் பார்த்திபனிடம் சூர்யா அண்ணாவுடன் இணைவீர்களா என கேட்டுள்ளார். அதற்கு பார்த்திபன்
கதை வைத்திருக்கிறேன்
கடை விரிப்பதில்லை!
சூரரைப் போற்றுவோம்
சூர்யாவைப் போற்றுவோம்
வாய்ப்பு வாய்ப்பின்-இருவரும்
பெருமைப் பட என் பேனா மை
உண்மையுடன் உழைக்கும்!
என கவிதையுடன் பதில் அளித்துள்ளார்.
கதை வைத்திருக்கிறேன்
கடை விரிப்பதில்லை!
சூரரைப் போற்றுவோம்
சூர்யாவைப் போற்றுவோம்
வாய்ப்பு வாய்ப்பின்-இருவரும்
பெருமைப் பட என் பேனா மை
உண்மையுடன் உழைக்கும்!— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2020