Pandiraj Suriya Movie Update
Pandiraj Suriya Movie Update

சூர்யாவுடன் புதிய படம் இயக்குவது எப்போது என இயக்குனர் பாண்டிராஜ் பதில் கூறியுள்ளார்.

Pandiraj Suriya Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

TRP-யில் முக்கிய இடம் இடம் பிடித்து சாதனை படைத்த இரண்டு அஜித் படங்கள், கொண்டாட மறந்த அஜித் ரசிகர்கள் – வெளியான மரண மாஸ் தகவல்!

இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

மேலும் இவரது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியானது.

சத்தமில்லாமல் விஜய் சேதுபதி படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான செம அப்டேட்!

இந்த படத்தை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் படம் குறித்த விமர்சனத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அப்போது சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யா அண்ணாவுடன் படம் பண்ணுவது எப்போது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாண்டிராஜ் வெகுவிரைவில் என பதிலளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதுவே சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் கூடிய விரைவில் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம்.