Pandian Stores Serial Update

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Pandian Stores Serial Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த சீரியலில் நடித்த சித்ரா கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் ரசிகர்கள் சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியிருந்த நிலையில், தற்போது அந்த குறையை இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த அறிவு என்பவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஆக நடித்து வருகிறார்.

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் கதிர் படவாய்ப்பு கிடைத்ததன் மூலம் பெங்களூர் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கதிர் ரசிகர்கள் அவர் எப்பொழுது சீரியலுக்கு வருவார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்துவரும் ஜீவா என்ற வெங்கட் தளபதி விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்ததாகவும் அவர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சித்ரா ஏற்கனவே கால்ஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.