Pandian Stores Mullai Role Replacement

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Pandian Stores Mullai Role Replacement : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் குமரனின் மனைவியாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா.

இவர் கடந்த வாரம் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சித்ராவின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் சென்று கொண்டிருக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனி சித்ராவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது.

இவர் நடிக்கிறார் அவர் நடிக்கிறார் என பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு பின்னர் அது வதந்தி என தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது உன்னை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. அதாவது இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா தான் முறையாக நடிக்கப் போகிறார்.

இதனை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.