Pandian Stores Kumaran in New Movie

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் குமரன் படவாய்ப்பு வந்ததற்காக பெங்களூரு சென்றுள்ளார்.

Pandian Stores Kumaran in New Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான கதிர் முல்லை இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

ஆனால் சீரியலில் முல்லையாக
நடித்த சித்ரா கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் கூறப்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போது இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மற்றொரு சீரியல் ஆன பாரதி கண்ணம்மாவில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்த காவியா என்பவர் முல்லையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

ஆனால் தற்போது கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் இரண்டு நாட்களாக சீரியலில் காண்பிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் ஊருக்கு சென்று இருப்பது போல சொல்லி வருகிறார்கள். நிஜம் எதுவென்றால் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததாகவும், அதில் நடிப்பதற்காக பெங்களூர் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடித்து முடித்தபின் சீரியலில் தொடருவார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.