Pandian Stores Jeeva Dance to Vaathi Coming

அச்சு அசலாக அப்படியே தளபதி விஜய் போலவே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.

Pandian Stores Jeeva Dance to Vaathi Coming : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும் கதிர், ஜீவா, முல்லை என அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் இந்த சீரியல் பிரபலங்கள் எதைச் செய்தாலும் அது சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது.

அந்த வகையில் தற்போது ஜீவா வாத்தி கம்மிங் பாடலுக்கு அச்சு அசலாக அப்படியே தளபதி விஜய் நடனம் ஆடியது போலவே நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.