Pandian Stores Hema Condolences to Chithra

இது நீ இல்ல, இது பொய்யாய் இருக்க கூடாதா சித்ராவின் தற்கொலை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் ஹேமா தெரிவித்துள்ளார்.

Pandian Stores Hema Condolences to Chithra : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா.

ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே சித்ரா பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து ஜனவரியில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் சித்ரா இன்று அதிகாலை 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இந்த தற்கொலை சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பலரும் சித்ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் சீக்கியரின் அவருடன் இணைந்து நடித்து வரும் ஹேமா சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ரா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதாவது நீ இப்படி பண்ற ஆள் இல்ல.. நிச்சயமா இப்போ வரைக்கும் என்னால நம்ப முடியவில்லை அதிர்ச்சியா இருக்கு. இந்த தகவல் பொய்யாய் இருக்க கூடாதான்னு தோணுது என தெரிவித்துள்ளார்.