பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் திடீரென மாற்றப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

Pandian Stores Director Change : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து காவ்யா அறிவுமணி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் முன்பு போல டிஆர்பியில் முன்னேற்றம் இல்லை என கூறப்படுகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர் மாற்றப்பட்டு இருப்பதாகவும் பாக்யலட்சுமி சீரியல் இயக்குனர் தான் இயக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.