Pandian Stores Chithra Replacement

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவலை மீனா வெளியிட்டுள்ளார்.

Pandian Stores Chithra Replacement : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா.

இவர் கடந்த வாரம் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இப்படியான நிலையில் தற்போது நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா முல்லையாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சித்ராவின் கதாபாத்திரத்தை சித்ராவை போலவே காவியா நடித்துக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.