Pandian Stores Actress Gowshalya in Hospital

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Pandian Stores Actress Gowshalya in Hospital : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பம் பற்றி பேசும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் கௌசல்யா பாட்டி. இவர் மறைந்த பழம்பெரும் நடிகரான செந்தாமரையின் மனைவி ஆவார்.

பூவே பூச்சூடவா சீரியலில் யுவராணி அம்மாவாக நடித்து வந்த இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சீரியஸான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ செலவுக்கு கூட கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கௌசல்யா பாட்டி வெகு விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.