Pachai Vilakku

தர்பார் படத்திற்கு போட்டியாக சிறிய பட்ஜெட்டில் நல்ல கருத்தை மையமாக கொண்டு வெளியான பச்சை விளக்கு திரைப்படமும் வெற்றி நடை போட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் பேராசிரியர் டாக்டர் மாறன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் பச்சை விளக்கு.

சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளையும் மொபைல் போன்களால் இளைய சமுதாயம் அழிந்து போவதையும் அடிப்படியாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.

படத்தை பார்த்தவர்கள் பெரும்பாலும் நல்ல கருத்துள்ள படம், நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என பாராட்டி வருகின்றனர்.

இதனால் இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்திற்கு போட்டியாக இன்னும் பல தியேட்டர்களிலும் பச்சை விளக்கு திரைப்படம் திரையிடப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.