Pachai Vilakku
கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களுடன் பச்சை விளக்கு திரைப்படம் துணிந்து மோத இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. நவம்பர் மாதம் முடிவை நெருங்கி விட்டதால் பல படங்கள் டிசம்பர் மாதத்தை குறி வைக்க தொடங்கி விட்டன.

குறிப்பாக டிசம்பரில் கார்த்தியின் தம்பி, சிவகார்த்திகேயன் ஹீரோ, உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ என பல படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் டாக்டர் மாறன் அவர்கள் இயக்கி நடித்துள்ள பச்சை விளக்கு என்ற சமூக கருத்துள்ள திரைப்படமும் ரிலீசாக உள்ளதாம்.

சாலை விபத்துகளும் விழிப்புணர்வுகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை படக்குழு டிசம்பர் 13 அல்லது டிசம்பர் 20-ம் தேதி வெளியிட ஆலோசித்து வருகிறது. கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.