Paavakathaikal Official Trailer

பல இயக்குனர்கள் ஒன்றிணைந்து இயக்கிவரும் பாவ கதைகள் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

Paavakathaikal Official Trailer : தமிழ் சினிமாவில் திரைப் படங்களைப் போலவே தற்போது OTT தளங்களில் வெப்சீரிஸ் தொடர்கள் உருவாவது அதிகமாகி வருகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் சுதா கொங்கரா விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் என 4 இயக்குனர்கள் ஒன்றிணைந்து பாவ கதைகள் என்ற வெப் சீரிஸ் தொடரை இயக்கி வருகின்றனர்.

இதில் சாந்தனு, அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சிம்ரன், கௌதம் மேனன் என பல திரையுலக பிரபலங்கள் நடிக்கின்றனர்.

தற்போது இதன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. ட்ரைலரில் அஞ்சலி பெண் ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

கௌதம் மேனனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர் டிரைலரின் இறுதியில் தன் மகளையே கொல்லத் துணியும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த டிரலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

YouTube video