Pa Ranjith About Join With Vijay

இரண்டு வருடத்திற்கு முன்பே கதை சொன்னேன் ஆனால் விஜய் நிராகரித்து விட்டதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Pa Ranjith About Join With Vijay : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து பா ரஞ்சித் அளித்த பேட்டி ஒன்றில் காலா படத்தை முடித்துவிட்டு தளபதி விஜயை சந்தித்து ஒரு கதையை கூறியதாக தெரிவித்துள்ளார்.

அது முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோ திரைப்படம். ஆனால் விஜய் இப்போதைக்கு இந்தப் படம் வேண்டாம் ஓரிரண்டு வருடங்கள் போகட்டும் என கூறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அதன் காரணமாகவே தளபதி விஜய் இந்தப் படத்தை வேண்டாம் என நிராகரித்து இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இன்னொருபுறம் பா ரஞ்சித் படங்களில் ஜாதி ரீதியான கருத்துக்கள் இடம் பெறும் என்பதாலும் விஜய் இதனை நிராகரித்து இருக்கலாம் எனவும் பேச்சு இருந்து வருகிறது.

ஒருவேளை பா ரஞ்சித் விஜய் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வெளியானால் அது எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் ஷேர் செய்யுங்க.