P.T Selvakumar

P.T Selvakumar : கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் நிவாரணமாக மூன்று லாரிகளில் சுமார் இருபத்தைந்து லட்சம் செலவில் டி.ராஜேந்தர் மூலமாக கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

இரண்டாம் கட்டமாக நேற்று டெல்டா பகுதி விவசாய பெண்கள் 500-பேருக்கு பசுக்கன்றுகளை கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து பி.டி செல்வகுமார் வழங்கினார்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேதாரண்யம், திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக ஜி.வி.பிரகாஷ் வழங்கினார். அப்போது ஜி.வி.பிரகாஷ் இது பற்றி பேசிய போது ……

விவசாய பெருமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக 500 பசுக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

இனி அவர்களுக்குத் தேவை வாழ்வாதாரமும், பொருளாதாரமும் தான். முதல் படியாக இந்த பசுக்கன்றுகள் உதவியானது இருக்கும் என்று நினைக்கிறேன்.

இனி தன்னார்வலர்கள் விவசாயத்திற்குரிய மரக்கன்றுகள், சாகுபடிக்கான செலவுகள், கால்நடைகள் வாங்கி தந்தால் அவர்களுக்கு பயம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

மத்திய-மாநில அரசுகள் வேகமாக தங்களது பணிகளை முடுக்கி விட வேண்டும்.

மின்சார பாதிப்பால் கிராமங்கள் இருண்டு கிடக்கிறது. விரைவில் அவர்கள் வெளிச்சத்தை பார்க்க வேண்டும்.

500 பசுக்கன்றுகள் என்பது சாதாரண விஷயமல்ல . இதை பல்வேறு இடங்களில் சேகரித்து தந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

பி.டி.செல்வகுமார்

கலப்பை மக்கள் இயக்க பி.டி.செல்வகுமார் பேசும் பொது, கஜா பாதிப்பு அரசுக்கு சவாலான பணிகள் என்றாலும், இன்னும் வேகமாக செயல்படலாம்.

ஆளும் கட்சி அ.தி.மு.க என்பதால் அனைத்து பகுதியிலிருந்தும் பணிகளையும் உதவிகளையும் அதிகம் செய்திருக்க முடியும்.

மத்திய அரசால் தமிழக மக்கள் பெரிதும் வஞ்சிக்கபடுகிறார்கள். நமது வரிப்பணங்கள் வீணாக விரயமாக்கப்படுகிறது.

சிலை வைக்க 3000-கோடி, மீள முடியாத துயரத்தில் அல்லோல்படும் 7- மாவட்ட விவசாய, மீனவ மக்களுக்கு 100-கோடி. இந்த கொடுமையெல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.

விரைவில் நமது மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். 500 பசுக்கன்று தானத்தை மாவட்ட கலெக்டர் முதல் தாசில்தார்கள், கிராம தலைவர்கள் வரை பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

டெல்டா விவசாய ஒருங்கிணைப்பாளர் லெட்சுமணன் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் போல் மற்ற தன்னார்வாலர்களும் எங்களுக்கு உதவினால் எங்களது பொருளாதாரம் மேம்படும்.

இந்த நிகழ்வில் ஃபைவ்ஸ்டார் செந்தில், செல்வவேல், கிறிஸ்டோபர், பாலாஜி, வி.கே.வெங்கடேசன், அலெக்ஸ், எஸ்.ஏ.எஸ் ஸ்கூல் யோகராஜ், ராஜ்குமார், நந்தகுமார், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.