OYC in DMK Party Meeting

ஐபேக் கொடுத்த ஐடியாவால் திமுக எடுத்த திடீர் முடிவு கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

OYC in DMK Party Meeting : தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட AIMIM – என்கிற இஸ்லாமிய பெரும்பான்மை கட்சி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கால் பதித்து இஸ்லாமியர்களுக்கான ஒரு தேசிய கட்சியாக மாற தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலிலும் கூட இக்கட்சி போட்டியிட்டு கனிசமான வெற்றியையும் பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் அசாவுதீன் ஓவைசி தமிழக சட்ட மன்ற தேர்தலிலும் தனது கட்சியின் முக்கிய பங்கு இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அவர், தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது பொது கூட்டத்தில் கலந்து கொள்ள ஓவைசிக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பாக அதன் சிறுபான்மையினர் அணி தலைவர் மஸ்தான் ஹைதராபாத்திற்கு சென்று ஓவைசியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

ஓவைசியும், ஜனவரி 6ம் தேதி நடைபெறும் தி.மு.க பொது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து, ஏற்கனவே தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்க கூடிய சிறுபான்மை கட்சி தலைவர்கள், குறிப்பாக மனித நேய மக்கள் கட்சி மற்றும் நீண்ட காலமாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சிறுபான்மையினர் கட்சியாக கருதப்படும் திமுக, பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது. அப்படிபட்ட தி.மு.க தற்போது, வெளி மாநிலத்திலிருந்து ஒரு கட்சியை அழைப்பதா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், ஐபேக் கொடுத்த அறிவுரையின் பேரில் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழந்துள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது அணி அமையாமல் இருக்க தி.மு.க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் முடிவாகவே ஒவைசியிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கக்கூடிய சிறுபான்மை கட்சிகளுக்கு தி.மு.க துரோகம் செய்கிறதா என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. தி.மு.கவின் இந்த நகர்வை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக மூத்த பத்திரிக்கையாளர் ஆர். ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ திமுக தலைவர் ஒரு மாநாட்டிற்கு AIMIM தலைவரை அழைத்துள்ளது.காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழ்நாடு கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஓவைசிக்கு தி.மு.க விடுத்துள்ள அழைப்பு அக்கட்சிக்கு புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் சிறுபான்மை கட்சிகள் இருந்தும், தேர்தலுக்காக வேறு மாநிலத்தில் இருந்து ஐபேக்கை இறக்கியது போல தற்போது கட்சியையும் திமுக இறக்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன்னை மதசார்பில்லா கட்சி என அழைத்துக்கொள்ளும் திமுக, ஓர் முற்றிலுமான இசுலாமிய கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்கமுடியும் என்ற ஓர் கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இது போல பல கட்சிகள் கூட்டணியில் சேறுவதால், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியமான கட்சிகளுக்கும் கூட மிக குறைவான இடங்களையே கொடுக்கும் என தெரிகிறது. இதனால் பெரிய கூட்டணி கட்சிகள் கூட அதிருப்தியில் தான் உள்ளன என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.