Oviya Wishes to Thalapathy Vijay

செம தைரியம் தான் என தளபதி விஜயின் செயலை பாராட்டித் தள்ளியுள்ளார் நடிகை ஓவியா.

Oviya Wishes to Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பூஜை கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளன.

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர் தளபதி விஜய் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அன்று தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று ஓட்டு போட்டார். தளபதி விஜய் சைக்கிளில் சென்று ஓட்டு போட்டதை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஓவியா செம தைரியம் ஒரே வார்த்தையில் ட்வீட் போட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.