எஸ்டிஆரின் எடை குறைப்பு குறித்து ஓவியா கொடுத்த பதிவு செய்து ரசிகர்களை செம கடுப்பாக்கி உள்ளது.
Oviya About STR Weight Loss : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் தீபாவளிக்கு டீசர் வெளியாகும் எனவும் நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த படத்திற்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகளும் மூலம் தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
சிம்புவின் புதிய கெட்டப் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வந்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஓவியாவிடம் இதுகுறித்து கேட்டதற்கு இது என்ன பெரிய விஷயமா யாராக இருந்தாலும் மூணு மாசம் கடுமையாக உழைத்தால் எடையை குறைத்து விடலாம் என கூறியுள்ளார்.
இதனால் சிம்பு ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். ஓவியாவின் இந்தப் பேட்டியை சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.