சியான்கள் என்ற படத்தில் இருந்து ஒட்டி ஒட்டி நானும் வாரேன் எட்டி எட்டி ஏண்டி போற என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா, நளினிகாந்த், ராட்சசன் பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான்கள்.
இந்த படத்தில் இருந்து கார்த்திக் குரலில் இசையமைப்பாளர் முத்தமிழ் இசையில் உருவாகியுள்ள ஒட்டி ஒட்டி நானும் வாரேன்.. எட்டி எட்டி ஏண்டி போற என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேட்க கேட்க இனிக்கும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. பலரும் ரசிக்க கூடிய பாடலாக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.