AIADMK CM Candidate 2021
AIADMK CM Candidate 2021

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி வருவது முதல்வருக்கு மேலும் பலத்தை உறுதியாகி வருகிறது.

OPS Supporters Jumped to EPS Side : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

அதன் பின்னர் திடீரென சில மாற்றங்கள் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றார். இதனால் ஓபிஎஸ் தர்ம யுத்தம் என்ற பெயரில் தனியாக பிரிந்து சென்று போராட்டம் நடத்தினர்.

அதன் பின்னர் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் பெயரில் மீண்டும் கட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்தார். அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

AIADMK Meet 2020

முதல்வர் பழனிச்சாமிக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு இடையே இதுகுறித்து பெரிய போரே நடந்து வருகிறது. அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

கட்சியின் போக்கை கவனித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். இதனால் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பலம் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் அனைவரின் ஒருமித்த முடிவாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.