OPS about Tasmac
OPS about Tasmac

OPS about Tasmac – சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு திட்டங்கள் குறித்து கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில் , தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பெண்களுக்காக விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார் ஓபிஎஸ் அவர்கள்.

மேலும் முன்பு, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.