YouTube video

Rajinikanth Confirm His Political Entry : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அரசியலில் இறங்கப் போவதாக தொடர்ந்து பல வருடங்களாக கூறி வருகிறார்.

கடந்த வருடத்தில் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்குவதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்களை சந்தித்தபோது விரைவில் அரசியலில் ஈடுபடும் என இல்லையா என்பது குறித்து அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.

Rajinikanth Confirm His Political Entry

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேச முடிவால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.