அம்மாவின் வழியில் ஆட்சியை வழிநடத்துகிறார் அண்ணன் எடப்பாடி- துணை முதல்வர் புகழாரம் | TN Govt

O Panneerselvam praises EPS : கோவையில் அதிமுக சார்பாக நடைபெற்ற திருமன நிகழ்ச்சியில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேடையில் பேசும்போது இதை தெரிவித்தார்.

திருமண நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஏழைகளுக்கு உதவிகளைச் செய்து, தலைவர் பிறந்த நாளைக் கொண்டாடும் கட்சி அதிமுக மட்டும்தான். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கட்சி, ஆட்சி இரண்டையும் மிக உன்னதமான நிலைக்குக் கொண்டு சென்றார்.

Dial 1100 toll-free helpline to TN Govt

இதனால், 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஆள்கின்ற பொறுப்பை 32 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்ற ஒரே தலைவராகவும் ஒரே முதல்வராகவும் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்தார்.

ஜெயலலிதா ஆட்சிபோல : தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல், அதே பாதையில் பயணித்து, மக்களுக்கு நடைமுறைப்படுத்தும் முதலமைச்சரின் ஆட்சி இன்று சென்றுகொண்டிருக்கிறது.

நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் ஆற்றவேண்டும்’ என பேசினார்.