O Panneer Selvam Wishes to Ajith

தல அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு ஓ பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

O Panneer Selvam Wishes to Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நடிகராக மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் சைக்கிளிங் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே இவர் துப்பாக்கி சுடுதலில் சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்ற 46 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தல அஜித்தின் இந்த சாதனையை அவரது ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்திற்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில் தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அன்புச் சகோதரர் திரு.அஜித் குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆறுகளை இந்த வாழ்த்து பதிவிற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

அஜித் இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் மட்டுமல்லாமல் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.