NNOR Movie Review : Rio Raj, RJ.Vignesh, Radha Ravi, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Sivakarthikeyan

NNOR Movie Review :

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வேணு கோபால் இயக்கத்தில் விஜய் டிவி ரியோ ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

படத்தின் கதைக்களம் :

ரியோவும் விக்னேஷ் காந்த்தும் ஒரு தொலைக்காட்சி சேனலில் பிராங்க் ஷோ நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு நாள் இருவரும் சேர்ந்து படத்தின் நாயகி கழுத்தில் கத்தி வைத்து பிராங்க் செய்கின்றனர்.

பிராங்காக இருந்தாலும் துணிச்சலாக இறங்கி செய்யும் இவர்களின் தைரியத்தை பார்த்த ராதா ரவி பிக் பாஸ் டாஸ்க் கொடுப்பது போல இவர்களுக்கு உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு கடினமான மூன்று டாஸ்க் கொடுக்கிறார்.

முதல்ல இந்த படம்தான், அப்புறம்தான் அது – சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்!

இந்த டாஸ்குகளை செய்தால் பணம் கொடுப்பதாகவும் கூறுகிறார். பணத்திற்காக ரியோவும் விக்கியும் டாஸ்க்க்ளை ஏற்று கொள்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கிறது? அப்படி ராதா ரவி என்ன டாஸ்க் கொடுத்தார்? அதில் இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ரியோ ஒரு சில இடத்தில் சூப்பரான நடிப்பையும் சில இடங்களில் சுமாரான நடிப்பையும் கொடுத்துள்ளார். விக்கியின் உருவம் தான் காமெடியாக இருக்கே தவிர அவருக்குள் காமெடி இல்லை என்று தான் எண்ண தோன்றுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் உறவில் விரிசல்; காரணம் இதுவா?

ஹீரோயின் ஷெரீனுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை, இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை முழுசாக முடித்து கொடுத்துள்ளார்.

ராதா ரவி அழுத்தமான கதையில் அசால்டாக நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். நாஞ்சில் சம்பத் வரும் காட்சிகள் தான் நம்மை கலகலப்பாக்குகின்றன. அவர் வேடிக்கையாக பேசும் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் அற்புதம்.

தொழிநுட்பம் :

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் :

ஷபீரின் பின்னணி இசை, செந்தில் குமாரின் ஒளிப்பதிவு, பென்னி ஃஒலிபரின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

வேணு கோபாலன் படத்தை காமெடியாக கொண்டு சென்று செல்ல முயன்றுள்ளார். சில எங்களில் சொதப்பல் உள்ளன. காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றினாலும் கிளைமேக்ஸில் மெர்சல் செய்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. கிளைமாக்ஸ் காட்சியும் சொல்லப்படும் தகவலும் அற்புதம்
2. நாஞ்சில் சம்பத், ராதா ரவியின் நடிப்பு

தம்ப்ஸ் டவுன் :

1. விக்னேஷ் காந்தின் மொக்க காமெடிகள்
2. ரியோவின் நடிப்பு ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது.

REVIEW OVERVIEW
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
nnor-movie-reviewமொத்தத்தில் : கிளைமாக்ஸ் காட்சிகாகவே இந்த படத்தை பார்க்கலாம். யூ ட்யூப் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் சூப்பர் ட்ரீட்டாக இருக்கும்.