Nerkonda Paarvai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.O படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NKP Movie Cast : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் இணைந்து நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இவர்களை தொடர்ந்து இப்படத்தில் எச்.ஆர் மேனேஜராக நடித்துள்ளார் கே கே மேனன். இவர் ஏற்கனவே ரஜினியுடன் 2.o படத்திலும், ஜோதிகாவின் நாச்சியார் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே கே மேனன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு அஜித்துடன் ஒரு காட்சி கூட இல்லை என்றும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.