Nivar Cyclone: தமிழகம் முழுவதும் 4787 பாதுகாப்பு முகாம்கள் - தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!! | EPS
Nivar Cyclone Camp in Tamilnadu : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த புயல் இன்னும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே இன்று நள்ளிரவில் கரையை கடக்க உள்ளது.


இதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகம் முழுவதும் 4,733 முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 12.98 லட்சம் பேர் முகாம்களில் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வரை 104 முகாம்களில் 4509 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.