NGK total worldwide collection | Suriya | Selvaragavan | Sai Pallavi | Rakul Preet Singh | Yuvan Shankar Raja | ivakumar Vijayan
NGK total worldwide collection

முதல்வார இறுதியில் உலக அளவில் இப்படம் 50 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது இதில் தமிழகத்தில் இப்படம் வெறும் 28 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

NGK total worldwide collection – செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

தளபதி 64-ல் எச்.வினோத் மேஜிக், விஜய் கொடுத்த மிக பெரிய வாய்ப்பு – அசத்தல் அப்டேட் இதோ!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

இது வசூலிலும் பாதித்துள்ளது முதல்வார இறுதியில் உலக அளவில் இப்படம் 50 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது இதில் தமிழகத்தில் இப்படம் வெறும் 28 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இத்திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மற்றொரு தோல்வி படமாக அமைந்துள்ளது.