NGK first day tickets sold out in Sathyam
NGK first day tickets sold out in Sathyam

சத்யம் திரையரங்கில் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் என்.ஜி.கே படத்துக்கான முதல்நாள் டிக்கெட்கள் முழுவதும் விற்றுத்தீர்ந்துவிட்டதாம்.

NGK first day tickets sold out in Sathyam – செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க சென்னையில் சத்யம் திரையரங்கில் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் இப்படத்துக்கான முதல்நாள் டிக்கெட்கள் முழுவதும் விற்றுத்தீர்ந்துவிட்டதாம்.இதுவே இப்படத்துக்கு இருக்கும் மவுசை எடுத்து சொல்கிறது.