NGK becomes highest opening for Suriya in TN, Tamil Cinema News, Cinema Latest News, Tamil Cinema, Tamil News, Selvaragavan
NGK becomes highest opening for Suriya in TN

NGK becomes highest opening for Suriya in TN

தமிழகத்தில் முதல் நாள் இப்படத்தின் வசூல் சூர்யாவின் இதற்கு முந்தைய கேரியர் பேஸ்ட் ஆன அஞ்சான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

NGK சூப்பரா? சுமாரா? – கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு ட்வீட்

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் வசூலைப் பொறுத்தவரை எதிர்பார்ப்பு இருந்ததால் இப்படத்தின் ஓபனிங் நன்றாகவே வந்துள்ளது அதன்படி தமிழகத்தில் முதல் நாள் இப்படத்தின் வசூல் சூர்யாவின் இதற்கு முந்தைய கேரியர் பேஸ்ட் ஆன அஞ்சான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் முதல் நாளில் இப்படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.