News About Vijay Political Party

புதிய கட்சியைத் தொடங்கினார் தளபதி விஜய் என தகவல் வெளியாகி விஜய் ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பதை தெரிவித்துள்ளார் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ்.

News About Vijay Political Party : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற படம் வெளியாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தளபதி விஜய் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கப் போவதாக கூறப்பட்டு வந்தது. தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும் நேரம் வரும்போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் தளபதி விஜய் தன்னுடைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பதை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த விண்ணப்பத்தில் கட்சியின் தலைவர் பத்மநாபன் எனவும் பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திரசேகர் எனவும் பொருளாளர் சோபனா சந்திரசேகர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் என்ற டேக் உருவாக்கி சமூக வலைதளப் பக்கங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடத் தொடங்கினர்.

இந்த நிலையில் தளபதி விஜய் எந்தவித கட்சியையும் தொடங்கவில்லை இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என விஜய்யின் நினைத்து ஜெகதீஷ் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.