கொரானா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

New Rules on Lock Down in Tamilnadu : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் முழுவதுமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார், வணிக வளாகங்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை. இரவு நேர ஊரடங்கு ஞாயிறுகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.