New Record of Master Teaser

மாஸ்டர் படம் பற்றி மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

New Record of Master Teaser : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நடிகர் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் உடன் இணைந்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க தளபதி விஜயின் உறவினரான பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்த டீசர் 4.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி புதுப்புது சாதனைகளை படைத்து வருவதால் ரசிகர்கள் இதனைக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.