Anitha Sampath

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்ததைத் தொடர்ந்து அனிதா சம்பத்தை ட்விட்டரில் டிரெண்ட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர்.

Anitha Sampath : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

18 போட்டியாளர்களில் ஒருவராக அனிதா சம்பத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இவர் எனக்கு யாரும் பேச ஸ்பேஸ் கொடுக்கவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் தனக்கு பேச நேரம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அனிதா சம்பத்தை வைத்து மீம்களை உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர்.

இதனால் ட்விட்டரில் அனிதா சம்பத் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார்.

அதேசமயம் அனிதா சம்பத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் கூடி வருகிறது.

https://twitter.com/sririthviknivin/status/1328158401071697920?s=19
https://twitter.com/Ensoilife/status/1328135786827399169?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.