Nerkondapaarvai First Look
Nerkondapaarvai First Look

Nerkonda Parvai : அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என டைட்டில் வைத்திருப்பதாக நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பாரதியாரின் புதுமை பெண்கள் என்ற கவிதை தொகுப்பில் இடம் பெரும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் என்ற வரியில் இருந்து நேர்கொண்ட பார்வை என்பதை தேர்வு செய்து டைட்டிலாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த டைட்டில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. அதே சமயம் தளபதி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கையும் கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணைத்து அவர்களும் கொண்டாடி வருகின்றனர்.