போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா டைராங், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்திரன், அஸ்வின் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 8-ல் வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

Nerkonda Paarvai Review : 

படத்தின் கதைகளம் :

பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் என்பதால் படத்தின் கதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோர் தோழிகள். சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

ஒரு பார்ட்டியில் அஸ்வின், ஆதிக் மற்றும் அவர்களது நண்பர் ஒருவருடன் அறிமுகமாகின்றனர். அங்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத்ற்கு அஸ்வின் பாலியல் தொந்தரவு கொடுக்க ஷ்ரத்தா அவரை கண்ணாடி பாட்டிலால் தாக்கி விடுகிறார்.

அதன் பின் இந்த பிரச்சனை போலீசுக்கு செல்கிறது. போலிஸ் தரப்பு இந்த மூன்று பெண்களுக்கு எதிராக சதி செய்கிறது. வக்கீலான அஜித் இந்த பெண்களுக்காக வாதாடி எப்படி வெல்கிறார் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

அஜித்தின் நடிப்பு :

தல அஜித் மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமான கிளாஸான நடிப்பை கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் வாதாடும் விதம் குற்றவாளிகளின் வாயில் இருந்தே விசயங்களை வெளியே கொண்டு வரும் விதம் ஆகியவை சூப்பர்.

எப்பவுமே யோசிச்சிட்டு நடக்கணும்.. யோசிச்சிட்டே நடக்க கூடாது.

ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்ட இன்னொருத்தரை குற்றவாளியாக்காதீங்க இன்னும் பக்காவான டைலாக்கள் உள்ளன.

ரங்கராஜ் பாண்டே :

அஜித்தை எதிர்த்து வாதாடும் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு சூப்பர். இனி தொடர்ந்து பல படங்களில் அவரை எதிர்பார்க்கலாம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா :

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பு அற்புதம். எமோஷனல் காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அபிராமிக்கு இப்படம் மிக பெரிய அடையாளமாக இருக்கும் என நம்பலாம். ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக இப்படம் இருக்கும்.

அஸ்வின், ஆதிக் மற்ற நடிகர்களின் நடிப்பு :

அஸ்வின், ஆதிக் ரவிச்சந்திரன் மற்ற நடிகர்களின் நடிப்பும் பிரமாதமாக கை கொடுத்துள்ளது.

தொழில்நுட்பம் :

இசை :

யுவன் அஜித்தின் கூட்டணி பற்றி சொல்லவே தேவையில்லை. கிளாசிக் படத்திற்கு ஏற்ற மியூசிக்.

ஒளிப்பதிவு :

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு தெளிவு.

எடிட்டிங் :

கோகுல் சந்திரனின் எடிட்டிங் அற்புதம்.

இயக்கம் :

எச். வினோத் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல படத்தின் சில காட்சிகளை சேர்த்து ஒரு சிறப்பான படமாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. அஜித்தின் நடிப்பு
2. வசனங்கள்
3. கிளைமாக்ஸ்
4. திரைக்கதை

தம்ப்ஸ் டவுன் :

1. பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை