Psycho
சைக்கோ படத்தில் இருந்து நீங்க முடியுமா பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோரை வைத்து சைக்கோ படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இளையராஜா இசையமைத்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் இப்படத்தில் இருந்து உனை நினைத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நீங்க முடியுமா என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ நீங்களும் கேட்டு பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.