Neelambari Character Secrets of Padaiyappa

படையப்பா படத்தில் முதலில் நீலாம்பரியாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Neelambari Character Secrets of Padaiyappa : தமிழ் சினிமாவின சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா.

ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், குடும்ப பாசம் என அனைத்தும் கலந்த பக்கா என்டர்டெய்னர் படமாக இப்படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படையப்பா கதாபாத்திரத்தில் நடிக்க சௌந்தர்யா நாயகியாக நடித்திருந்தார். மேலும் சிவாஜி கணேசன் ரஜினியின் அப்பாவாக நடித்து இருந்தார்.

மேலும் பவர்ஃபுல் வில்லியாக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரம்யா கிருஷ்ணன். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லையாம்‌. சிம்ரன் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்துள்ளார்.

சில கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன்பின்னர்தான் ரம்யாகருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.