Nayanthara’s villain to clash with Vikram | Kollywood | Imaikkaa Nodigal | Tamil Cinema | Ajay Gnanamuthu | Anurag Kashyap

Nayanthara’s villain to clash with Vikram :

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்தான் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

தலைக்கேறிய போதை, ஹோட்டலில் டாப்ஸீ செய்த அட்டகாசம் – என்ன கொடுமை இது?

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற இந்த படம் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.

மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்ப இந்த படம் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு.

இது ஒருபக்கம் இருக்க விக்ரமின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்ததாக அவர் அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்க உள்ளாராம். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.