Nayanthara Salary :
Nayanthara Salary : இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.
நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.
நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.
சிவாவுடன் முதல் முறையாக இணைந்த பிரபல நடிகை, கூடவே இவரும் – SK 16 ஸ்பெஷல் அப்டேட்.!
தொடர் வெற்றிகளால் இவர் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். தற்போது ஒரு படத்துக்கு நயன்தாரா 5 கோடி சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
இது மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவு.
இதை அண்மையில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக சொன்ன பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநிவாசன், இங்கு திறமைக்குதான் மரியாதை.. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என கூறியுள்ளார்.