ஈஸ்டரை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார் நடிகை நயன்தாரா.

Nayanthara Celebrates Easter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் இவர் நானும் ரௌடி தான் என்ற படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். சமீப காலமாக இருவருக்கும் திருமணமாகி விட்டதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஈஸ்டரை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.