Nayanthara About Dhanush on Stage

என்னுடைய நடிப்பு அவருக்கு அந்த படத்தில் சுத்தமாக பிடிக்காது என தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Nayanthara About Dhanush on Stage : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போது தொடர்ந்து மெகா ஹிட்டாகி வருகின்றன.

இந்த நிலையில் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வாங்கினார்.

அந்த விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய போது இந்த படத்தில் என்னுடைய நடிப்பு தனுஷுக்கு சுத்தமாக பிடிக்காது. அடுத்த முறை இப்படி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நயன்தாரா இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் நயன்தாராவின் இந்த காதம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசும் ஒன்றாக இருந்தது‌.

இந்தப் படத்தை தனுஷ் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.