Nayan and Vicky Age Difference
Nayan and Vicky Age Difference

ஏ ஆர் ரகுமான் உடனான பேட்டியின் போது விக்னேஷ் சிவன் குறித்த உண்மை என்று அம்பலமாகியுள்ளது.

Nayan and Vicky Age Difference : தமிழ் சினிமாவில் பிரபல இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினார்.

அதன் பின்னர் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் இவர் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தையும் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

சூர்யா-கௌதம் மேனன் இடையான பிரச்சனைக்கு காரணம் என்ன? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை!

மேலும் இவர்லேடி சூப்பர்ஸ்டார் ஆனால் நயன்தாராவை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா விட வயது குறைவு என்பது அவர் ஏ ஆர் ரஹ்மானை பேட்டி எடுத்தபோது தெரிய வந்துள்ளது.

இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது ரகுமான் நீங்கள் 1984 பிறந்தீங்களா எனக் கேட்டதற்கு இல்லை 1985 என பதிலளித்துள்ளார்.

நடிகை நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி பிறந்துள்ளார்.

இதன் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவனை விட 10 மாதம் வயதில் மூத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகள் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்து கொள்வது என்பது பெரிய விஷயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.