nanguneri

நாங்குநேரியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்தோரை பொதுமக்கள் அடித்து உதைத்து ஒரு வீட்டில் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் அங்கு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார் தனது சகாக்களுடன் அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது ஓட்டுக்கு அவர் பணம் கொடுப்பதாக தகவல் வெளியானது. எனவே, அங்கு பொதுமக்கள் சிலர் வந்த போது எம்.எல்.ஏ சரவணக்குமார் உள்ளிட்ட சிலர் அங்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

எனவே, அவர்களிடம் வாக்குவாதத்தில் சில இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலரை வாலிபர்கள் தாக்கினர். மேலும், அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் வைத்து பூட்டினர். அதன்பின், போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பறக்கும் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையர் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.