Nammalvar Award to Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nammalvar Award to Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழா கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் அந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.