Namma Veettu Pillai Review : Plus and Minus of NVP.! | Sivakarthikeyan | Aishwarya Rajesh | Anu Immanuvel | Samuthrakani | Natti Natraj
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

Namma Veettu Pillai Review : சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்ரகனி, நட்டி நட்ராஜ், பாரதி ராஜா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவரான சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருந்தாலும் அவருக்கு அப்பா இல்லை என்ற ஒரு காரணத்தினால் அவரையும் அவரது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷையும் மற்றவர்கள் யாரும் ஒரு குடும்ப ஆளாகவே கருதுவதில்லை.

அப்படியான நிலையில் தன்னுடைய தங்கைக்கு நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஊர் முழுவதும் பெண் தேடியும் யாரும் முன்வரவில்லை. இறுதியில் நட்டி நட்ராஜ் முன்பகையை மனதில் வைத்து கொண்டு திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார்.

சிவகார்த்திகேயனும் தன்னுடைய தங்கையின் கணவன் என்பதால் பல இடங்களில் விட்டு கொடுத்து செல்கிறார். இறுதியில் இவர்களின் உறவு என்னவானது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சிவகார்த்திகேயனின் எமோஷனல் கலந்த நடிப்பு பல இடங்களில் பார்ப்போரை கலங்க வைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் நடிகையாக இருந்தாலும் துணித்து தங்கை வேடத்தில் நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அணு இம்மானுவேல் சும்மா டூயட் பாட மட்டுமே படத்தில் வந்து செல்கிறார். மற்ற அனைவருமே அவர்களின் கதாபாத்திரங்களை திறம்பட செய்து முடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

டி. இம்மானின் கிராமத்திய இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் அருமை

ஒளிப்பதிவு :

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவை பற்றி குறை சொல்ல முடியாது, ஒவ்வொரு காட்சிக்கும் தன்னுடைய கை வண்ணத்தால் உயிர் கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

ரூபனின் கச்சிதமான எடிட்டிங் படத்தை கச்சிதமாக கொண்டு சென்றுள்ளது.

இயக்கம் :

குடும்ப கதைகளுக்கு பெயர் போன பாண்டிராஜ் இந்த படத்தையும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். என்ன ஒன்று தமிழ் சினிமாவில் பார்த்து சலித்து விட்ட கதை என்றாலும் அதனை இந்த தலைமுறைக்கு ஏற்றார் போல கொண்டு சென்றது சிறப்பு.

தம்ப்ஸ் அப் :

1. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு
2. இசை
3. ஒளிப்பதிவு
4. காமெடி

தம்ப்ஸ் டவுன் :

1. அணு இமானுவேலின் கதாபாத்திரத்தில் தெளிவு இல்லை
2. சில இடங்களில் போதும் பா என தோன்றும் உணர்வு

YouTube video

YouTube video

REVIEW OVERVIEW
நம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
namma-veettu-pillai-reviewமொத்தத்தில் நம்ம வீட்டு பிள்ளையாக நல்ல கம்பேக் கொடுத்து விட்டார் சிவகார்த்திகேயன். குடும்பத்துடன் பார்த்து மகிழ ஏற்ற படம்.