Namma Ooru Singaari Remix Song

விஜய் ஆண்டனி குரல் மற்றும் நடிப்பின் நம்ம ஊரு சிங்காரி பாடல் ரீமிக்ஸ் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Namma Ooru Singaari Remix Song : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அடுத்ததாக கோடியில் ஒருவன் மற்றும் பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் ஹிட் பாடல்களில் ஒன்றான நம்ம ஊரு சிங்காரிஎன்ற பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த பாடலில் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.

1979 ஆம் ஆண்டில் வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள நம்ப ஊரு சிங்காரி என்ற பாடலை தான் ரீமிக்ஸ் செய்துள்ளார்.

இந்த பாடலை சரிகமப மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் இணையத்தில் வழங்கியுள்ளது. தற்போது இந்த பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ நீங்களே பாருங்க

YouTube video