விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் புதியதாக நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

Namma Ooru Hero in Sun Tv : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக அதிகமான பார்வையாளர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒன்றினை ஒளிபரப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதாவது நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சி மூலமாக யூ டியூபில் சமையல் செய்பவர்களை அழைத்து பேட்டி எடுப்பது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.