Namitha's Weight loss Secrets

உடல் எடை கூடி இருந்த சமயத்தில் தற்கொலை செய்துகொள்ள தான் தோன்றியது என அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை நமீதா.

Namitha’s Weight loss Secrets : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நமிதா. எங்கள் அண்ணன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அஜித், விஜய், சரத்குமார் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நமிதா நடித்துள்ளார். ஆனால் போகப்போக இவருடைய உடல் எடை கூடிக் கொண்டே சென்றதால் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

அதன் பின்னர் காதலரான தயாரிப்பாளர் வீராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை தொடர்ந்து தற்போது நமிதா சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு குண்டாக இருந்த புகைப்படத்தையும் தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

உடல் எடை கூடி இருந்த சமயத்தில் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியதாக தெரிவித்துள்ளார். யாருடனும் பழக முடியவில்லை, இரவில் தூக்கம் இல்லை. நிறைய சாப்பிட்டேன் என தெரிவித்துள்ளார்.

நான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக சொல்கிறார்கள் ஆனால் எனக்கு சினைப்பை, தைராய்டு பிரச்சனை இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

தற்போது நான் கிருஷ்ணாவையும் மந்திரா தியானத்தையும் நம்பி முழு முயற்சியோடு இறங்கினேன். கிருஷ்ணாவை வழிபடுவதும் தியானம் செய்வதில் தான் என்னுடைய சிகிச்சை.

அதன் பலனாக தற்போது எடையை குறைத்துள்ளேன். இதன் மூலம் அமைதி இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து உள்ளேன் என தெரிவித்துள்ளார்.