BB5 Update

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தன்னை கூப்பிட்டாலும் செல்ல மாட்டேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nakhul Explain About BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கி உள்ளது.

இந்த ஐந்தாவது சீசனை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்குவார் எனவும் முதல் போட்டியாளராக நடிகர் நகுல் பங்கேற்க உள்ளார் அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவியது.

இப்படியான நிலையில் தற்போது நகுல் வீடியோ ஒன்றில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளப் போவதாக போஸ்டர் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். ஆனால் அது உண்மையில்லை. என்னிடம் யாரும் அப்ரோச் செய்யவில்லை. அப்படியே செய்தாலும் இந்த தங்கத்தை ( என் மகளை ) விட்டுவிட்டு என்னால் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.